Published : 26 Oct 2020 03:57 PM
Last Updated : 26 Oct 2020 03:57 PM

மூலம், பூராடம், உத்திராடம் ; வார நட்சத்திரப் பலன்கள்; அக்டோபர் 26 முதல் நவம்பர் 1ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

சாமர்த்தியமாக செயல்பட்டு பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாரம்.

தேவைக்கு மேல் வருமானம் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை.குடும்ப உறுப்பினர்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலையே இருக்கும். முக்கியமான வேலைகள் அனைத்தையும் இந்த வாரம் முடித்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களோடு இணைந்து தொழிலைச் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

செவ்வாய் -
அதிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரிடம் கோபத்தைக் காட்டக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
வேலைகளில் முனைப்பு காட்டி எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் இன்று முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நண்பர்களின் உதவியோடு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


வியாழன் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடும் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்த முக்கிய பிரச்சினைக்கு இன்று முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்களில் ஒருசிலருக்கு அத்தியாவசிய உதவிகளைச் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுகள் முடிவாகும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதிகள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது. வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளை கேட்டுப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பெருமாள் ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************

பூராடம் -

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். அதற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும். செலவுகள் வெகுவாகக் குறையும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் எதிர்பாராத வகையில் இருக்கும். சேமிப்பு பல மடங்காக உயரும்.

பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் தொடர்பாக ஏற்பட்ட மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும்.

செவ்வாய் -
எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் வரும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். சச்சரவுகள் நீங்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமான போக்கை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு கருத்து கூறாமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**************************

உத்திராடம் -

எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சகோதர வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். அல்லது திருமண வயதில் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சிலர் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அலுவலக வேலைகளில் இயல்பான நிலையே இருக்கும். சக ஊழியர்களுடன் ஒருவருக்கொருவர் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

பெண்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக ஆர்வம் ஏற்படும். சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

வெள்ளி -
உங்கள் பணிகளை மட்டும் இன்று கவனித்து வாருங்கள். பணி செய்யும் இடத்தில் மற்றவர்கள் வேலைகளில் தலையிடாதீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழியுங்கள். அவர்களிடமும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பை தராத வகையில் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x