Published : 22 Oct 2020 10:36 AM
Last Updated : 22 Oct 2020 10:36 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும்.

மன நிம்மதியும் மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு பண வரவு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகரை வணங்கி வாருங்கள். கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம்.

மன நிம்மதியைக் குறைக்கும். வீண் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். பெண்களுக்கு செலவு கூடும். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாகப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது மகத்துவமானது. கஷ்டங்களைப் போக்கி மனதில் நிம்மதியைத் தரும்.
~~~~~~~~~~~~~~~

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பல வகைகளில் யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள்.

அடுத்தவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினருக்கு நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். மாணவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x