Published : 12 Oct 2020 06:27 AM
Last Updated : 12 Oct 2020 06:27 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல், பணவிரயம் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவதிகள் ஏற்படக் கூடும். யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்க காரியங்கள் தாமதமின்றி முடியும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வேலைக்கான முயற்சியில் தடைகள் ஏற்படும்.

மகரம்: சாதுர்யமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு வழி பிறக்கும். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டு.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்தி கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கக் கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x