Published : 01 Oct 2020 18:15 pm

Updated : 01 Oct 2020 18:15 pm

 

Published : 01 Oct 2020 06:15 PM
Last Updated : 01 Oct 2020 06:15 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் கிரகநிலை சூழ்நிலையில் ஓரளவுக்கு நன்மை பெறப் போகிறீர்கள்.

பணவரத்து கூடும். ஆன்மிகச் செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகப் பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பெருமை ஏற்படும். அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
எண்கள்: 2, 3, 9
நிறங்கள்: வெள்ளை, நீலம்
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்குவதன் மூலம் அனைத்துக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.

*******************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் எதிலும் வெற்றி கொள்வீர்கள்.

நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

சுபகாரியங்கள் சம்பந்தமான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர் காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனதில் மகிழ்சி உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
எண்கள்: 1, 3, 9
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகளை அர்ப்பணித்து வணங்குங்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பேசும் வார்த்தையிலும் கொடுக்கும் வாக்கிலும் நிதானம் தேவை.
******************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் பணவரவு வரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும்.

சொத்துகள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆவணங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது.

பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும்போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு தடுமாற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களைப் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
எண்கள்: 5, 6
நிறங்கள்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வாருங்கள். பல நன்மைகளைப் பெறுவீர்கள். கோயில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

கடகம்சிம்மம்கன்னி; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)கன்னிவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author