Published : 29 Sep 2020 06:32 AM
Last Updated : 29 Sep 2020 06:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

ரிஷபம்: புத்திசாலித்தனத்தால் முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர் பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் ஏற்படும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் உதவி மற்றும் ஆலோசனையை நாடுவார்கள்.

துலாம்: சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். முக்கிய பொறுப்புகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக் கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மனதில் நிலவும் வீண் பயத்தை போக்குவீர்கள்.

தனுசு: வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருக்கும்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x