Published : 27 Sep 2020 09:15 PM
Last Updated : 27 Sep 2020 09:15 PM

திருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -

வரவுகளால் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாரம்.

அதிக முயற்சி இல்லாமலேயே பல வேலைகளும் எளிதாக முடிந்து விடும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். சொத்துகள் விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு பலமாக உயரும்.

அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து சக ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை இருப்பவர்கள் இந்த வாரம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல சாதகமான தகவலைப் பெறலாம்.

தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும். உற்பத்தியான பொருட்கள் தேங்கி நின்ற நிலை மாறி உடனுக்குடன் விற்பனையாகும். தொழில் தொடர்பாக முக்கியமான சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஒப்பந்தங்களும் முதலீடுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும் லாபம் இருமடங்காக இருக்கும்.

பெண்களுக்கு சுபகாரிய விஷயங்கள் முடிவாகும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும், பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு சிறு தூரப் பயணங்கள் ஏற்படலாம். ஆதாயம் தரும் விஷயங்கள் சற்று தாமதமாக முடிவாகும்.

செவ்வாய் -
சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவு தாராளமாக இருக்கும். பணப்புழக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். சுபவிசேஷங்கள் பற்றிய செய்தி திருப்திகரமாக இருக்கும்.

புதன் -
பணவரவு சரளமாக இருக்கும். முக்கியமான வேலைகள் அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துக் கொள்வது நல்லது. மதியத்திற்குப் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஒருசில மனவருத்தம் ஏற்படும் சம்பவங்கள் நடைபெறலாம்.

வியாழன் -
ஆதாயம் தரும் விஷயங்களாகவே இன்று நடைபெறும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மனை வாகனம் இவற்றால் ஆதாயம் ஏற்படும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தாய்வழி உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே முடியும், ஆனால் அது தாமதமாக முடியும். பணவரவு உள்ளிட்ட எந்த விஷயங்களிலும் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் செலவு அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி -
சிறப்பான பலன்கள் நடைபெறக்கூடிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, எதிர்பார்த்த லாபம் அனைத்தும் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று முழுமையாக செய்து முடிக்கக் கூடிய நாள்.

ஞாயிறு -
குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனப் பழுது உள்ளிட்டவற்றை இன்றைய தினம் சரி செய்து கொள்வது நல்லது. இன்று முழுமையாகச் செலவுகளைச் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். வெளியில் செல்வது கூடாது. பயணங்களையும் தவிர்க்கவேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை வழிபாடு செய்வதும். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும், நல்ல பலன்களைத் தரும்.
*************************

அவிட்டம் -

எடுத்துக்கொண்ட காரியங்களை சிறப்பாக செய்து பெருமை அடையக்கூடிய வாரம்.

நினைத்ததை நினைத்தபடி செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். இதுவரை புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவு இல்லாமல் புத்திர பாக்கியம் உண்டாகும்.

அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பேச்சைத் தொழிலாக கொண்டவர்களுக்கும், வங்கிப் பணியாளர்களுக்கும், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கும் சிறப்பான நன்மைகள் நடக்கும்.

பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது. இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வதற்கான வாய்ப்பு ஒரு சில பெண்களுக்கு கிடைக்கும். பெற்றோர்கள் மூலமாக ஒரு சில பண உதவிகளும் இன்னும் ஒரு சிலருக்கு சொத்துகளும் சேரும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பார்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். உயர் கல்வி பயில்வதற்கான வங்கிக் கடனுக்கு முயற்சி செய்தால் இப்போது சாதகமாக இருக்கும். கலைஞர்கள் புதிய நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் எளிதாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி, லாபம் இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் தொடர்பான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை மட்டுமல்லாமல் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சீரான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீண்ட நாளாக வராமலிருந்த தொகை இன்று கிடைக்கும்.

புதன் -
சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரம் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். பெண்கள் சுய தொழில் தொடர்பான முயற்சிகளில் இன்று ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வியாழன் -
நிதானமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பதட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நிதானமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வெள்ளி -
எதிர்பாராத உதவிகள் தேடி வரும். நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். அவர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனைவிவழி உறவினர்கள் பொருளாதாரம் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சனி -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்பாராத பண வரவு உண்டாகும். தூரத்து உறவினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். முக்கியமான பிரச்சினைகளில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பீர்கள். வியாபார நிமித்தமான பயணத்தால் ஆதாயம் உண்டு.

ஞாயிறு -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலட்சுமியை வழிபடுங்கள். வெண்தாமரை மலர் கொண்டு மகாலட்சுமி தாயாரை வணங்குவது நற்பலன்களை அதிகமாக்கும்.
********************

சதயம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதுவரை இருந்துவந்த அநாவசியச் செலவுகள் வெகுவாகக் குறையும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. ஒரு சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

பழைய நகைகளை விற்று புதிய நகைகள் வாங்குவது போன்றவை நடக்கும். சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது மனை வாங்குதல் போன்றவை நடக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் நல்ல வளர்ச்சியைப் பெறும்.

பெண்களுக்கு சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து ஆதாயம் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் இருக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாகக் கையாள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த உபகரணங்களையும் கவனமாகக் கையாள வேண்டும்.

செவ்வாய் -
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் நாள். பணவரவு பல வழிகளிலும் இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் அதிக சிரத்தை இல்லாமலேயே முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய விஷயங்கள் இனிதாக முடிவாகும்.

புதன் -
தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து தர முன்வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும்.

வியாழன் -
பண வரவுகளால் மனநிறைவு அடையும் நாள். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்கள் முடிவாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். நிதானமாக இருக்க வேண்டும். படபடப்பை குறைத்துக்கொள்ளுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கோப உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.

சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகளை இன்று சரி செய்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பணவரவு எதிர்பாராத வகையில் இருக்கும். சிறு தூரப் பயணம் ஏற்படும். அதில் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடையக்கூடிய நாள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் இன்று சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x