Published : 27 Sep 2020 16:22 pm

Updated : 27 Sep 2020 16:22 pm

 

Published : 27 Sep 2020 04:22 PM
Last Updated : 27 Sep 2020 04:22 PM

 புனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை 

vaara-natchatira-palangal

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -

நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் வாரம்.

தேவையான உதவிகள் தேடி வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். மாற்றுச் சிந்தனை உருவாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

வீடு வாங்குவது தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இப்போது பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். வங்கிப் பணியாளர்கள் ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான தகவல் உறுதியாகும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி. முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கனரக வாகன தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், டிராவல்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கும் வருமானம் இருமடங்காக கிடைக்கப் பெறுவார்கள்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். காய்கறி மொத்த வியாபாரம் செய்பவர்கள், தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், இவர்களுக்கெல்லாம் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடிய வருமானம் கிடைக்கும்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.

செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பொருளாதார சிக்கல்களினால் சில சங்கடங்களை சந்தித்து வந்த நீங்கள் அந்த பொருளாதாரச் சிக்கல் தீரக் கூடிய அளவிற்கு வருமானம் கிடைக்கும்.

புதன் -
எதிர்கால சிந்தனைகள் தோன்றும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கிய பற்றிய தகவல் உறுதியாகி மகிழ்ச்சியைத் தரும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமான வாய்ப்பு கிடைக்கும்.

வெள்ளி -
மனதில் தேவையற்ற அச்ச உணர்வு உண்டாகும். முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை.

சனி -
சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளை தீவிர கவனம் செலுத்தி அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கக்கூடிய நாள். ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் லாபகரமாக இருக்கும்.

ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல் தோன்றி மறையும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எனவே குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் பெருகும்.
********************

பூசம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறக் கூடிய காலம் வந்து விட்டது. இப்போது அந்த முயற்சியில் ஈடுபட்டால் சொந்த வீடு உறுதியாக கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடுங்கள்.

தந்தைவழி சொத்துக்கள் லாபம் தரக் கூடியதாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும்.

அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை இருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். குழுவுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் தொழிலுக்கு கிடைக்கும்.

ஆடை உற்பத்தி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். ஆடை ஆபரண வியாபாரம் செய்பவர்களுக்கும், சிறு வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வருமானம் திருப்தி தரக் கூடிய அளவில் இருக்கும்.

பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். நல்ல வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு இப்போது நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு இப்போது திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு நண்பர்களால் உதவிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக பணியாற்ற வேண்டிய நாள். அவசர செயல்பாடுகளைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். எந்த ஒரு விஷயத்திலும் கருத்து கூறாமல் இருக்க வேண்டும்.

செவ்வாய் -
பணத்தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்க கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் தேவைகள் பூர்த்தியாகும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்கள் மூலமாக புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான சந்திப்புகள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவீர்கள். புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்புகளும் உண்டு.

ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமானை வணங்குங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நன்மைகள் பலவும் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*****************

ஆயில்யம் -

மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடிய வாரமாக இருக்கும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். செயல்களில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேச முடியாமல் ஆளுக்கு ஒரு அறையில் முடங்கிக் கிடந்தவர்கள் இனி குடும்ப பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசி ஒற்றுமையை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். ஒரு சிலர் தங்கள் பணிகளை விடுத்து தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களும் மருத்துவம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் நல்ல வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இதுவரை வராதிருந்த பாக்கிகள் வசூலாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், நடமாடும் வகையிலான வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் இப்போது நிரந்தரமாக வியாபாரம் செய்யக்கூடிய கடைகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டாமல் இருப்பது நல்லது. தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக சந்திக்க இருந்த நபரை இன்று சந்திப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள், பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சேமிப்பு உயரக்கூடிய நாளாக இருக்கும்.

சனி -
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தி தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்குவது நன்மைகளைக் கொடுக்கும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



தவறவிடாதீர்!

புனர்பூசம்பூசம்ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரைஆயில்யம்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author