Published : 27 Sep 2020 01:11 PM
Last Updated : 27 Sep 2020 01:11 PM

ரோகிணி, மிருகசீரிடம்,திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

நன்மைகள் பலவாறாக நடக்கும்.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் முடிவுக்கு வரும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

சகோதரங்களால் ஆதாயம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் உங்களோடு போட்டி போட்ட நபர் விலகிச் செல்வார்கள்.

இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து பணி நியமன ஆணை கிடைக்கும். தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் அகலும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு தாமதமானாலும் சரியான நேரத்திற்கு கிடைத்துவிடும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். சகோதர வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

செவ்வாய் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் சீராக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

புதன் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாகத் தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் ஒரு சிலருக்கு கிடைக்கும். ஆரோக்கியப் பாதிப்புகள் விலகும்.

வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். சுபகாரிய விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தாமதமாக தம்பதிகளுக்கு இன்று புத்திர பாக்கியம் பற்றிய தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
அதிகப்படியான செலவுகள் ஏற்படக் கூடிய நாள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் ஆதாயம் எதிர்பார்க்க வேண்டாம், எனவே பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.

ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலனை தரும்.
****************

மிருகசீரிடம் -

நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வாரம் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். வேலை காரணமாக பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

வேலையில்லாதவர்களுக்கு பொழுது நல்ல வேலை கிடைக்கும். தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கிறது. இட மாற்றம் விரும்பியவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் இப்போது கிடைக்கும்.

தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் அகலும். இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மருந்துக்கடை வைத்திருப்பவர்களுக்கும் ஆடம்பரப் பொருள் விற்பனை வியாபாரத்தை நடத்தி வருபவர்களும் சிறப்பான வியாபார வளர்ச்சி இருக்கும்.

பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சுய தொழில் தொடர்பாக குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள் -
புதிய முயற்சிகளில் ஈடுபட சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய் -
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் எளிதாக பேசி முடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கடி நிலைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் தகுந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


புதன் -
மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி நல்ல பேர் வாங்குவீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் முடிவுக்கு வரும்.

வியாழன் -
நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் விவாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதைத் தவிர்க்க என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும்.


வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலமாக பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த நாளில் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு -
செலவுகள் அதிகமாக ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.
******************

திருவாதிரை -

நல்ல பலன்கள் நடைபெறக் கூடிய வாரம்.

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரக்கூடிய வாரமாக இருக்கும். குடும்பத் தகராறு காரணமாக வழக்குகள் ஏதும் இருந்தால் இப்போது வாபஸ் பெறுவீர்கள்.

சகோதர ஒற்றுமை மேலோங்கும். சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும். பெற்றோரின் ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு சிலருக்கு தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு நிர்ப்பந்தங்கள் விலகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற வியாபாரத்தை விரிவுபடுத்த புது கிளைகள் தொடங்குவது என ஈடுபட சாதகமாக இருக்கக்கூடிய வாரம்.

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களிடம் ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியோடு ஒரு முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு.தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தொடர்பான தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்தி மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும்.

வியாழன் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது.

வெள்ளி -
நேற்றையப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும், இருந்தாலும் கடுமையான அலைச்சலாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x