Published : 27 Sep 2020 06:26 AM
Last Updated : 27 Sep 2020 06:26 AM
மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள்.
மிதுனம்: குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.
கடகம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள்.
சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். கொடுக்கல் - வாங்கலில் நிலவிய பிரச்சினை தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து ஆலோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புதுவழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராத மனஸ்தாபம் வந்து நீங்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள்.
தனுசு: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும்.
மகரம்: சில நேரங்களில் மனம் அமைதியற்று காணப்படும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். ஆன்மிக பயணம் உண்டு.
கும்பம்: பண விஷயங்களில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT