Published : 24 Sep 2020 13:32 pm

Updated : 24 Sep 2020 13:33 pm

 

Published : 24 Sep 2020 01:32 PM
Last Updated : 24 Sep 2020 01:33 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.

ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையைக் காண்பீர்கள். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையைத் தரும்.

சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதியான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு தொல்லைகள் குறையும். கலைத்துறையினருக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அரசியல் துறையினருக்கு நற்பெயர் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், அடர்பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.
*****************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

உங்கள் திறமையைக் கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். அரசியல் துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாகச் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு கோபத்தைக் குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: மஞ்சள், நீலம்
எண்கள்: 3, 8
பரிகாரம்: ஆஞ்சநேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்யுங்கள். முடியும்போதெல்லாம் இரண்டுபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.
***********************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம்.

ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.

சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்துறையினருக்கு ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும்.
மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
எண்கள்: 2, 3
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்குங்கள். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரைமீனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author