Published : 22 Sep 2020 06:38 AM
Last Updated : 22 Sep 2020 06:38 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் தொடர்ந்தபடி இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி மளமளவென்று முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கடன் சுமையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x