Published : 21 Sep 2020 06:31 AM
Last Updated : 21 Sep 2020 06:31 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அக்கம்பக்கத்தினரின் தொந்தரவுகள் நீங்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்பட தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும். உடல்நலம் சீராகும்.

துலாம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவு ஏற்படும்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிரியமானவர்களுக்காக செலவு செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.

மகரம்: எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எண்ணுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் இன்று முடியும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.

மீனம்: சில நேரங்களில் விரக்தியுடன் பேசுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வெளியூர் பயணம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x