Published : 20 Sep 2020 01:42 PM
Last Updated : 20 Sep 2020 01:42 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

மனதில் புதிய நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.

செலவுகள் வெகுவாகக் கட்டுப்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

உறவினர்களால் நன்மைகளும் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.அவர்களால் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் அகலும்.

அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை இருக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி்உறுதி் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக முடிவெடுங்கள். அலுவலகப் பணியில் கவனமாக இருங்கள். சண்டை சச்சரவுகள் வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைப்பிடியுங்கள்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். அல்லது உறுதி செய்யப்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், விற்பனை பிரதிநிதிகளுக்கும் நல்ல முன்னேற்றத்தைக் காணக் கூடிய நாளாக இருக்கும்.

புதன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வியாழன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மன நிம்மதியும், நிறைவும் ஏற்படக்கூடிய நாள். வருமானத்தில் தடையிருக்காது. ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். தாமதப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக எச்சரிக்கையும் கூடுதல் கவனமும் தேவை. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

சனி -
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட விசேஷ காரியங்கள் முடிவாகக் கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************

மிருகசீரிடம் -

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் தீரும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் மனநிறைவு தந்தாலும், வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஒருசிலருக்கு நண்பர்கள் மூலமாக நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கும் இந்த வாரம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடைந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். எந்த முயற்சிகளிலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுத்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலையிலிருந்து அழுத்தம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

செவ்வாய் -
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான ஒரு சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

வியாழன் -
மனநிறைவு தரும்படியான காரியங்களைச் செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருக்குத் தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்து தருவீர்கள். அலுவலக வேலைகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். திறமைவாய்ந்த புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துவீர்கள்.

வெள்ளி -
வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கிக் கடன் பிரச்சினை முடிவுக்கு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் இருப்பவர்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் முடிவாகும்.

சனி -
பொறுமை, நிதானம், அவசரப்படாமல் இருப்பது போன்றவை இருக்க வேண்டும். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
******************

திருவாதிரை -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். குழப்பமான மனநிலைகளில் இருந்து இப்போது வெளி வருவீர்கள். குடும்பத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இப்பொழுது முடிவுக்கு வரும். சண்டைச் சச்சரவுகள் அனைத்தும் இப்போது சமாதானம் ஆகும்.

அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த நெருக்கடியான நிலை மாறும். தொல்லை தந்த ஊழியர்கள் விலகிச்செல்வார்கள். அல்லது அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். இதுவரை பாராமுகமாக இருந்த உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவையும், உற்சாகத்தையும் தருவார்கள்.

தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பர் இன்று தொடர்பு கொள்வார். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். தொழில்முறை நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி -
ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும் தொழில் வளர்ச்சியும் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகளும் இன்று முழுமையாக விலகும்.


சனி -
அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உறவினர்களுக்கும், மிக முக்கியமான வேண்டியவர்களுக்கும் ஒரு சில உதவிகளைச் செய்து தருவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். பணம் சம்பந்தமான வரவு செலவு பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக பயணம் ஒன்று ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். துர்கை கவசம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x