Published : 20 Sep 2020 11:57 AM
Last Updated : 20 Sep 2020 11:57 AM

அஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம்.

ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் நட்சத்திரத்திற்கு அதிபதி கிரகமான கேது பகவான் கேட்டை நட்சத்திரத்திற்கு வந்துவிட்டதால் இனி உங்களுக்கு தடைகள் ஏதும் இருக்காது.

சோம்பல் முற்றிலுமாக விலகும். மனதில் நம்பிக்கை பிறக்கும். மன தைரியம் அதிகமாகும். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்திலும் தந்தையின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

இதுவரை புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக பாகப்பிரிவினைகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அலுவலகப் பணிகள் எளிதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தரகு மற்றும் கமிஷன் தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரக் கூடிய அளவிற்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்திற்கான தகவல் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும்படியான ஒப்பந்த வாய்ப்புகள் உண்டாகும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு எட்டப்படும். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஒரு உதவியை கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணத்தைக் கையாளும்போது கவனம் தேவை. அலுவலகத்திலும் வெளியிடத்திலும் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபராத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*****************

பரணி -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மன சஞ்சலம் ஏற்படுத்திய பிரச்சினை இல்லாமல் போகும். மீண்டும் இயல்பான மன நிலைக்கு வருவீர்கள்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபட நல்ல பதில் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து, தொழிலுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும். வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான தகவல்களும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் வெற்றி உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மந்த நிலை இருந்தாலும்,சக ஊழியர்களின் உதவியோடு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். இன்னும் ஒரு சிலருக்கு அலுவலக பணிகளில் ஒருவித சலிப்பும், ஆயாசமும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இதுவரை இருந்துவந்த தாமதமான அல்லது மந்தமான சூழ்நிலைகள் மாறி சுறுசுறுப்பாக மாறும். சரியான திட்டமிடல் இருந்தால் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

வியாழன் -
அலுவலக வேலைகளில் சுறுசுறுப்பைக் காட்டி துரிதமாக அனைத்துப் பணிகளையும் முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
பொறுமை நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
***********************

கார்த்திகை -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.

பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். சகோதர வழியில் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.

அலுவலகப் பணியில் சகஜ நிலையே நீடிக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து வேலைக்கான வாய்ப்புகளை ஒரு சிலர் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சூழ்நிலைகளும், குடும்பச் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் பணியிட மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உற்பத்தியான பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
இன்றைய தினம் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். தாமதப்பட்ட வேலைகளை எல்லாம் செய்து முடிக்கக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்குக் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் வருகை உண்டாகும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக முக்கியமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் ஒத்துழைத்துச் செல்லுங்கள். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கொடுத்த பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். ஒரு சிலர் நண்பர்களோடு இணைந்து புதிய தொழில் அல்லது வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளை செய்வீர்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணு பகவானை வணங்குங்கள். பெருமாளுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**********************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x