Published : 18 Sep 2020 06:25 am

Updated : 18 Sep 2020 06:25 am

 

Published : 18 Sep 2020 06:25 AM
Last Updated : 18 Sep 2020 06:25 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பதற்றம், மனச்சோர்வு ஏற்படக் கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


Daily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author