Published : 17 Sep 2020 13:01 pm

Updated : 17 Sep 2020 13:01 pm

 

Published : 17 Sep 2020 01:01 PM
Last Updated : 17 Sep 2020 01:01 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நற்பெயர் எடுப்பீர்கள்.
பெண்களுக்கு உங்களது ஆலோசனைக் கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.
***********

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம்.

இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எதிர்காலத்திற்குத் தேவையான பணிகளைத் திட்டமிடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளைச் செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து, பெருமாளை வழிபடுங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

ராசிநாதன் குருவின் பார்வையால் மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.

பூமி - வீடு - வாகனம் சம்பந்தமான இனங்களில் அதிக லாபம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். கலைத்துறையினருக்கு அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபடுங்கள். காரியங்கள் கைகூடும். மனக் கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை)மீனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author