Published : 17 Sep 2020 10:35 am

Updated : 17 Sep 2020 10:35 am

 

Published : 17 Sep 2020 10:35 AM
Last Updated : 17 Sep 2020 10:35 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.

நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 9
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். கந்த சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
*****************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டமான வாரம்.

எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். வீடு மனை சம்பந்தமான காரியங்கள் அனுகூலம் தரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.


குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.

சொத்துகள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் நீங்கி நிம்மதியும் ஆனந்தமும் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.
********************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் பணப் பற்றாக்குறை நீங்கும்.

மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம், கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும்.

வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் தேவை. எந்த விஷயத்திலும் ஆவணங்களை முழுமையாகப் படித்த பின் கையெழுத்திடுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளைச் செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: நவக்கிரகத்தை வணங்கி வாருங்கள். முன்ஜென்ம பாவமெல்லாம் தீரும். குடும்பக் கஷ்டம் தீரும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மேஷம்ரிஷபம்மிதுனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை)மிதுனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author