Published : 13 Sep 2020 12:37 PM
Last Updated : 13 Sep 2020 12:37 PM

மகம், பூரம், உத்திரம் - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை)

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

மனதில் புதிய நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.

ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அது சுபச்செலவாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளாக வேலை வாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களுடைய கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை ஏற்படும். விரும்பிய கல்வி உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும்.

வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். அல்லது மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும்.

தொழில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி்செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்கு நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக முடிவெடுங்கள். அலுவலகப் பணியில் கவனமாக இருங்கள். சண்டை சச்சரவுகள் வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்கள் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வியாழன் -
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அல்லது நண்பர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வெள்ளி -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக எச்சரிக்கையும் கூடுதல் கவனமும் தேவை. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

சனி -
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப் பெருமானை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********************

பூரம் -

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் தீரும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்கும் வாய்ப்பும், விற்கின்ற பணத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது போன்றவை நடக்கும்.

தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். எந்த முயற்சிகளிலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

செவ்வாய் -
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
சொத்து தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

வியாழன் -
மனநிறைவு தரும்படியான விஷயங்களை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்கு தேவையானவை, கல்வி தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் செய்து தருவீர்கள். அலுவலக வேலைகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நிதானமான வளர்ச்சியும், லாபமும் இருக்கும்.

வெள்ளி -
வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கிக் கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான விஷயங்கள் முடிவாகும்.

சனி -
பொறுமை, நிதானம், அவசரப்படாமல் இருப்பது போன்றவை இருக்க வேண்டும். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
*******************

உத்திரம் -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். குழப்பமான மனநிலைகளில் இருந்து இப்போது வெளி வருவீர்கள். குடும்பத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இப்பொழுது முடிவுக்கு வரும்.

சண்டைச் சச்சரவுகள் அனைத்தும் இப்போது சமாதானமாகும். அலுவலகப் பணிகளில் மன நிறைவும் நிம்மதியும் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். தொழில்முறை நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி -
ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும் தொழில் வளர்ச்சியும், உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகளும் இன்று முழுமையாக விலகும்.


சனி -
அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உறவினர்களுக்கும், மிக முக்கியமான வேண்டியவர்களுக்கும் ஒரு சில உதவிகளைச் செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார விஷயமாக பயணம் ஒன்று ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்யஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும். சிறப்பான வாரமாக இருக்கும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x