Published : 13 Sep 2020 06:40 AM
Last Updated : 13 Sep 2020 06:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதியுடன் வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும்.

மிதுனம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.

சிம்மம்: பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகளும் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்,

கன்னி: எதிர்காலத்துக்கென பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளும் உதவுவார்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு: அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x