Published : 07 Sep 2020 03:02 PM
Last Updated : 07 Sep 2020 03:02 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 7 முதல் 13ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -

மிக அதிகமான முயற்சிகளாலும் அதிகப்படியான உழைப்பாலும் வெற்றிகளைப் பெறுகின்ற வாரமாக இருக்கும்.

தடைகளைத் தாண்டி வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அனைத்தையும் சரிப்படுத்த முடியும்.

சொத்துகள் பாகப்பிரிவினைகள் முதலான விஷயங்களை இன்னும் சிறிதுகாலம் தள்ளிப் போடுங்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக வரப்போகிறது, அப்போது பாகப்பிரிவினை வைத்துக் கொண்டால் நல்ல ஆதாயம் கிடைக்கக் கூடிய பாகம் உங்களுக்கு கிடைக்கும்.

அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் படிப்படியாக விலகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கடும் பிரச்சினைக்குப் பின்னரே கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் போதிய ஆர்வமும் விரும்பிய கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

வியாழன் -
நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் உதவிகளை எதிர்பார்த்து இருப்பார்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபாரத்துக்கான வழிவகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

சனி -
அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குருபகவான் வழிபாடு செய்யுங்கள். குரு கவசம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக்குழப்பம் தீரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
*********************

உத்திரட்டாதி -

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்து வந்த நீங்கள் இப்போது படிப்படியாக பிரச்சினைகளில் இருந்து விலகி வருவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.

மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உருவாகும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் உரிய நேரத்தில் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் தரகு மற்றும் கமிஷன் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்..வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்குத் திருமணம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு எட்டப்படும். இன்று அது குறித்த விஷயங்கள் எளிதாக முடிவாகும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
அலுவலகப் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினையிலும் தலையிட வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஹனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
******************

ரேவதி -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும்.

குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துகள் சேரும் வாய்ப்பும் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் ஆதாயம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துகள் கூட இன்று விற்பனை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

செவ்வாய் -
எதிர்பாராத அளவுக்கு அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தை போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். நெருக்கமான நண்பர்கள் உதவிக் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகை ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x