Published : 06 Sep 2020 05:11 PM
Last Updated : 06 Sep 2020 05:11 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 7 முதல் 13ம் தேதி வரை)

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -

எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும்.

எதிர்பார்த்த தேவைகளும் எதிர்பாராத தேவைகளும் பூர்த்தியாகும். இதுவரை முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டிருக்கும். இனி எந்தவிதமான தடைகளும் தாமதங்களும் ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு உதவிகள் தேடி வரும்.

குடும்ப உறுப்பினர்கள் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

தொழில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி் செய்யப்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
இரட்டிப்பு வருமானம் கிடைக்கக்கூடிய நாள். அதிக முயற்சிகள் இல்லாமலேயே எல்லா வேலைகளும் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். மொத்தத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கக் கூடிய நாள்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.

புதன்-
தர்ம சிந்தனை அதிகரிக்கும். தேடிப்போய் பலருக்கும் உதவி செய்வீர்கள். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள்.

வியாழன்-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும் அல்லது நண்பர்களிடமிருந்தோ, நிதி நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணியிட மாற்றம் தொடர்பான தகவல் மன நிம்மதியைத் தரக்கூடியதாக இருக்கும்.

வெள்ளி-
எந்த விஷயத்தில் பொறுமையாகக் கையாளவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சனி-
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ஞாயிறு-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீலக்ஷ்மி குபேர வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
************************

அனுஷம் -

சுறுசுறுப்பாகப் பணியாற்றி எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் இருந்த அச்ச உணர்வுகள் முழுமையாக விலகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

இதுவரை ஒரு சில சண்டை சச்சரவுகளால் களை இழந்த வீடு இப்பொழுது மகிழ்ச்சியால் ஒளிமயமாக மாறும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இப்போது வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கும். நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சுபகாரிய விசேஷங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலையிலிருந்த அழுத்தம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

செவ்வாய் -
எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் வருமானம் இருமடங்காக ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும், இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகும்.

புதன் -
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான ஒரு சில அத்தியாவசியப் பொருட்களை இன்று வாங்குவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

வியாழன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உற்சாக மிகுதியால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். செயல்களில் நிதானம் தேவை. அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.

வெள்ளி -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வங்கி கடன் பிரச்சினை ஒன்றை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று முடிவாகும்.

சனி-
பொறுமை, நிதானம், அவசரப்படாமல் இருக்க வேண்டும். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

கேட்டை -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.

குழப்பமான மனநிலையில் இருந்து இப்போது வெளி வருவீர்கள். இதுவரை எந்த வாக்கு கொடுத்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் நிம்மதி இல்லாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதைகள் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

பணப்புழக்கம் இல்லாமல் தடுமாறியவர்களுக்கு இனி பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிச்செல்வார்கள். இனி அலுவலகத்தில் உங்களுடைய திறமை கொண்டாடப்படும்.

தொழில் தொடர்பாக முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். சலுகைகள் கிடைக்கும். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலையை இன்று மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.

செவ்வாய் -
குடும்பத்தில் எதிர்காலம் பற்றிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். அதற்கான முயற்சிகளைத் தொடங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான போக்கு இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தேவை அதிகரிக்கும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.


சனி -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது சாதகமான நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபட்டு வாருங்கள். வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x