Published : 03 Sep 2020 09:22 AM
Last Updated : 03 Sep 2020 09:22 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 3 முதல் 9ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ராசியில் இருப்பதால் எடுத்துக் கொண்ட எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரம் மூலம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து வருவது தாமதமாகும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும்.

பெண்களுக்கு பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வந்தால், எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.
******************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான தொழில் சூடு பிடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்துகொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
*************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் அருமையான இடத்தில் அமர்ந்து மிக அதிகமான பலன்களை அள்ளித் தரப் போகிறார்.

எதிலும் சற்று அதிக முயற்சி கொடுத்தால் எதிர்பார்த்த வெற்றி வந்துசேரும். நீங்கள் முடிக்க வேண்டும் என நினைத்த காரியம் கச்சிதமாக முடியும். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி வரும்.

அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். வாக்குக் கொடுப்பதற்கு முன் கவனம் தேவை. பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.
கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்திதரும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்கி வாருங்கள். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x