Published : 28 Aug 2020 06:24 AM
Last Updated : 28 Aug 2020 06:24 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்கள் எல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வேலை தொடர்பாக எதிர்பார்த்த செய்தி வரும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் .உதவுவார்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவது வேதனையைத் தரும்.. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்பை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும்.. உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்..

மீனம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x