Published : 19 Aug 2020 06:26 AM
Last Updated : 19 Aug 2020 06:26 AM
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும்.
ரிஷபம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் காரியங்களிலிருந்த இழுபறி நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரரிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
கன்னி: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
தனுசு: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கவனமுடன் கையாளுங்கள்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி கிடைக்கும்.
மீனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT