Published : 16 Aug 2020 10:17 AM
Last Updated : 16 Aug 2020 10:17 AM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 17 முதல் 23ம் தேதி வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம் -

நினைத்தது நிறைவேறும் வாரம்.

பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த இறுக்கமான நிலை மாறும். எந்த ஒரு விஷயத்திலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த தடைகள் தாமதங்கள் இனி இருக்காது.

முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கவலைகள் மறையத் தொடங்கும் காலம் வந்துவிட்டது. இனி உற்சாக மனநிலையில் எப்போதும் இருப்பீர்கள். அலுவலகத்தில் முக்கியப் பணிகளில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

பெண்களுக்கு குடும்பச் சூழலுக்கேற்ற தேவையான உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும்.

மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் மிக எளிதாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகளும் தீரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சிறு தூர பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

வியாழன் -
சற்றும் எதிர்பாராத செலவுகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் கவனக்குறைவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

வெள்ளி -
தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுபவிசேஷங்கள் முடிவாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதரரால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பணி மாற்றம் தொடர்பான விஷயங்களில் இன்று ஈடுபட்டால் சாதகமான பதில் கிடைக்கும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும். மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். குரு கவசம் பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
***************************

பூசம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

பொருளாதார பிரச்சினைகள் தீரும். பண வரவால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும்.

சகோதரர்கள் தேவையான உதவிகளை செய்து தருவார்கள். எதிரிகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்து அதன் காரணமாகவே மனச்சோர்வு ஏற்பட்டிருக்கும். இனி எதிரிகள் காணாமல் போவார்கள். எந்த எதிரிகளால் மன உளைச்சலும் செலவுகளும் ஏற்பட்டதோ அவர்களாலேயே ஆதாயமடைவீர்கள்.

பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
தடைகளைத் தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்த படியே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன் என்று வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு -
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சனீஸ்வர பகவானை வணங்குங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
************************

ஆயில்யம் -

நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம்.

பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். சொத்துப் பிரச்சினைகளில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள் சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்பொழுது மனநிம்மதி ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறிய அளவிலான முயற்சி எடுத்தாலே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய வியாபார நபர்கள் அறிமுகமாவார்கள்.

வியாழன் -
நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நெருங்கிய நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முக்கியமான பிரச்சினையில் மனைவியின் உதவியால் பிரச்சினையைத் தீர்க்க வழி கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தேவையான பண வரவு கிடைக்கும். சிறிய அளவிலான வியாபார ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x