Published : 10 Aug 2020 06:22 AM
Last Updated : 10 Aug 2020 06:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்: திடீர் பயணம் ஏற்படும். நீண்டநாளாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த கோயிலுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: சமூக அந்தஸ்து உயரும். விஐபிகள் மத்தியில் தனி மரியாதை கிடைக்கும். முக்கியப் பதவி தேடி வரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும்.. வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலமான நிலை காணப்படும்.

சிம்மம்: சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள்கூட இழுபறிக்குப் பின்னரே முடியும். ஒருபக்கம் பணம் வந்தாலும் மறுபக்கம் செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: அரசாங்க விஷயங்கள் சிக்கலின்றி முடிவடையும். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும். பிறமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

தனுசு: புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: நீங்கள் எதிர்பார்த்தபடி வீடு, வாகனம் அமையும். இழுபறியாக இருந்துவந்த வழக்கு சாதகமாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பயணம் சாதகமாக அமையும்.

கும்பம்: விடாமுயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐபிகள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x