Published : 09 Aug 2020 07:16 PM
Last Updated : 09 Aug 2020 07:16 PM

திருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகக் கூடிய வாரம்.

பணவரவு மன நிறைவைத் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும்.

திருமண முயற்சிகள் கைகூடும். சுயதொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் பிரச்சினைகள் பெரிதாக ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகளும் வங்கி கல்விக் கடன் தொடர்பான விஷயங்களும் சாதகமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நபர் ஒருவர் அறிமுகமாவார். அவர் மூலம் ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கும்.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரர் எதிர்பாராத உதவி ஒன்றைச் செய்து தருவார்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமான செயல்களை செய்து மகிழ்வீர்கள்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தள்ளிப்போகும்.

ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றமான செயல்பாடுகள் நடக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் தரக்கூடிய வியாபார விஷயம் ஒன்று முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும்.
***********************************

அவிட்டம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். குடும்பப் பிரச்சினையை சுமுகமாக தீர்வு கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சகோதரர்களுடன் ஏற்பட்ட பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய்-
முடிக்க வேண்டிய வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பூமி தொடர்பான வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன்-
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

வியாழன்-
வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும் அரசு வழியில் இருந்து சலுகைகள் கிடைக்கும். வங்கியில் ஏற்பட்டிருந்த கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சிறிய பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
அரசு வேம்பு சேர்ந்த மரத்திற்கு நீர் ஊற்றி வலம் வாருங்கள். பிள்ளையாரை, அம்மனை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.
***********************************

சதயம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குறிப்பாக இரண்டாவது புத்திர பாக்கியத்திற்காக தாமதம் ஆகி கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது இரண்டாவது புத்திர பாக்கியம் உண்டாகும்.

அலுவலக வேலைகள் இயல்பான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருந்தாலும் முக்கிய நபரின் தலையீட்டால் கடன் பிரச்சினை சுமுகமாக முடிவடையும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தங்கள் அகன்று குடும்ப ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவல் தொடர்பாக தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும். கமிஷன் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.

செவ்வாய்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சுய கட்டுப்பாடு தேவை.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.


வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் வரவேண்டிய நிலுவை தொடர்பான தகவல் கிடைக்கும். தூரத்து உறவினர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருந்து உதவி செய்வார்கள்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். பயணங்களை தவிர்த்து விடுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
புற்றுக் கோயில்களுக்குத் தேவையான கைங்கரியங்கள் செய்து தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x