Published : 09 Aug 2020 17:04 pm

Updated : 09 Aug 2020 17:07 pm

 

Published : 09 Aug 2020 05:04 PM
Last Updated : 09 Aug 2020 05:07 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -


எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம்.

இந்த வாரம் முழுவதும் ஆதாயம் தரக்கூடிய விஷயங்களாகவே நடக்கும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு உதவிகரம் நீட்டுவார்கள். சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக பேசித் தீர்க்கப்படும்.

பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமான பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். வேறு நிறுவனத் தொடர்புகள் கிடைத்து அதன் மூலம் கிடைக்கும் ஒப்பந்தங்களால் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவை இல்லாமல் மற்றவர் மீது கோபத்தைக் காட்ட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்படும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபராத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி குரு பகவானை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************************

அனுஷம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிப்புகள் தொடங்குவதற்கு முயற்சி எடுப்பீர்கள்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் முழுமையாக விற்பனையாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

செய்கின்ற தொழிலோடு இணைந்து மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. சிறு வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

விவசாயம் தொடர்பான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் துறை சார்ந்த பயிற்சிகள் தொடர்பான வகுப்புகள் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

புதன் -
நிதானமான செயல்பாடு அவசியம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கருத்துப் பரிமாற்றங்களில் கவனம் தேவை.

வியாழன் -
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் மனநிறைவு உண்டாகும். நெருங்கிய உறவினர் ஒருவரால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
பொறுமையும் நிதானமும் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகளால் புதிய தொழில் ஒப்பந்தம் ஏற்படும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை தாமரை மலர் கொண்டு வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************************

கேட்டை -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.

எந்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் முழு வெற்றியைக் கொடுக்கும். உதவிகள் தேடி வரும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்கள். அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும்.

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான பண உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தகவல் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய்-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும், அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பணவரவு பல வழிகளிலும் வரும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருளை இன்று வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அனைத்து வித உதவிகளும் கிடைக்கும். அயல்நாட்டு நண்பர்கள் மூலம் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லட்சுமி குபேரர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


விசாகம்அனுஷம்கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை)விசாகம் அனுஷம்கேட்டைவார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author