Published : 09 Aug 2020 01:15 PM
Last Updated : 09 Aug 2020 01:15 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.

தாய்வழி உறவினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். தாய்வழி சொத்துகள் இப்போது கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் அனைத்தும் விலகும். மனைவி வழி உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். புத்திர பாக்கியத்திற்கு மருத்துவச் செலவுகள் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது புத்திரபாக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தரகு தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

போக்குவரத்து தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
படபடப்பைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது. பணம் புழங்கும் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கு இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
அலைச்சல்களும் அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பொறுமையைக் கையாள்வது நல்லது. அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான லாபம் கிடைக்கும்.

வெள்ளி -
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களைச் செய்ய வேண்டாம்.

சனி -
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும்.திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும்.
**************************

மிருகசீரிடம் -

பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குழப்பமான மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிப்புகளைத் தொடங்குவீர்கள்.
அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வழக்கமாகச் செய்யும் வேலையை விட அதிகமாக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு வழி சிக்கல்கள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன் -
வரவும் செலவும் சமமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவியும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் முன் எப்போதுமில்லாத லாபம் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி -
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*******************************

திருவாதிரை -

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, மீண்டும் ஒற்றுமை ஏற்படும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

குடும்பப் பிரச்சினை காரணமாக வழக்கு ஏதேனும் இருந்தால் அது இப்போது வாபஸ் பெறப்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள், நிலுவைத் தொகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் அல்லது கூட்டு வியாபாரம் செய்வதற்கான ஒருங்கிணைப்பு நடக்கும்.

பெண்களுக்கு நினைத்த அனைத்து காரியங்களும் இனிதாக நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சொத்து தொடர்பாக சகோதரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

கலைத் துறை சார்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளை இன்று முழு மூச்சாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தந்தைவழி உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன் -
எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வு தோன்றுவதால் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்குவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். நெருங்கிய நண்பரின் உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் சரியான நேரத்தில் கிடைத்து மனநிம்மதி ஏற்படும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சி மன நிறைவைத் தரும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தானாக தேடி வரும் அரசு சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.



வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய யுக்திகளைப் பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி -
முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த மந்தநிலை மாறும். எந்த வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வராமலிருந்த தொகை இன்று கிடைக்கும்.

ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். அக்கம்பக்கத்தினருடனும் நண்பர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீவாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x