Published : 04 Aug 2020 06:43 AM
Last Updated : 04 Aug 2020 06:43 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி காரியங்களை சாதிப்பீர்கள். உங்களிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிசயிப்பார்கள்.

ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவாலும், ஆலோசனையாலும் சிக்கல்களை எல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்து பிரச்சினை, வழக்குகள் முடிவுக்கு வரும்.

கன்னி: அடிமனதில் இருந்துவந்த பய உணர்வு நீங்கும். தடைகள் விலகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல விஐபிகளும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: பால்ய நண்பரின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சொந்தபந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

விருச்சிகம்: சகோதரர் வகையில் தக்கசமயத்தில் உதவிகள் கிடைக்கும். தள்ளிப்போன திருமண காரியங்கள் கூடி வரும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

தனுசு: உங்கள் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இழுபறியாக இருந்த தொகை வரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதையும் பொறுமையுடன் கையாள்வீர்கள்.

மகரம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பர்.

கும்பம்: அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கை பிறக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x