Published : 31 Jul 2020 04:44 am

Updated : 31 Jul 2020 04:44 am

 

Published : 31 Jul 2020 04:44 AM
Last Updated : 31 Jul 2020 04:44 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: அலைச்சல், வேலைச்சுமை, உடல் அசதி ஏற்படும். நண்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: அரசாங்க விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.. வழக்கில் தீர்ப்பு தள்ளி போகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.


மிதுனம்: கற்பனை வளம் பெருகும். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.. பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கடகம்: உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும்.

சிம்மம்: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். சுபச் செய்திகள் வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

கன்னி: புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். பொதுக்காரியங்களில் தானே முன்வந்து ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு பேசுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

தனுசு: உடல் நலம் சற்று பாதிக்கக் கூடும். சில வேலைகளை பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

மகரம்: எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள்.

கும்பம்: அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மீனம்: கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.


தவறவிடாதீர்!

Daily horoscopeராசி பலன்இந்த நாள் எப்படிநல்ல நாள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author