Published : 27 Jul 2020 19:23 pm

Updated : 27 Jul 2020 19:33 pm

 

Published : 27 Jul 2020 07:23 PM
Last Updated : 27 Jul 2020 07:33 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை) 

vaara-natchatira-palangal

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.


தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்வார்கள்.

மனதில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். இல்லாததை இருப்பதாக மனம் சிந்திக்கும். சோம்பல் தன்மை அதிகம் இருக்கும். சோம்பலைத் தவிர்த்து விட்டால் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் உண்டாகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும்.

வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
சுப விசேஷ செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை இன்றும் சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் சிறிய அளவிலான பண வரவு ஏற்படும்

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய வாய்ப்பு ஒன்று கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
பொறுமை மிக மிக அவசியம். உணர்ச்சிவசப்படுதல் கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சிறிய அளவிலான தவறு கூட உங்களுக்கு பிரச்சினைகளை உண்டுபண்ணும். கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்ப உறுப்பினருக்கு திருமணம் உறுதியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலமாக அதிகப்படியான உதவிகள் கிடைக்கும்.

சனி-
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். பணியில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவார்கள். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் விஷயங்கள் இன்று உறுதியாகும். வியாபாரம் தொடர்பாக நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
******************

அனுஷம் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், பிரச்சினைகள், பிரிவுகள் போன்றவற்றில் சமாதானம் ஏற்படும். வாக்குக் கொடுத்து நிறைவேற்ற முடியாமல் அவப்பெயர் சந்தித்தவர்கள்... இப்போது அந்த அவப் பெயரில் இருந்து மீண்டு வரக்கூடிய அளவிற்கு உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவருவார்கள். உறவினர் பகை மாறும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வரும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

செவ்வாய்-
வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற சர்ச்சைகள் தோன்றும். பொறுமை அவசியம். நிதானமாக எந்த செயலையும் செய்ய வேண்டும்.

புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிம்மதி தரும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு தாராளமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். முயற்சிகள் எதுவாக இருந்தாலும் முழுமையான வெற்றி கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் நடக்கும். சங்கடங்கள் தீரும்.
*****************************

கேட்டை -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருக்க வேண்டும்.

காசோலைகள் தருவதாக இருந்தால் முன் யோசனையோடு தரவேண்டும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் பிடிவாதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். எதிரிகளிடம் தேவையற்ற பிரச்சினைகளை செய்ய வேண்டாம்.

எதிரிகளைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் சகஜமான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும் வாய்ப்புள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவை தரும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புதன்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும், சுய கட்டுப்பாடு தேவை.

வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வெள்ளி-
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நினைத்தது நிறைவேறும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


விசாகம்அனுஷம்கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை)சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author