Published : 27 Jul 2020 04:43 PM
Last Updated : 27 Jul 2020 04:43 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை) 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக அகலும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் மட்டும் சிறு பாதிப்புகள் வந்து மறையும்.
தாய்மாமன் வகை உறவினர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள், தேவையற்ற பகையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். புதிய கிளைகள் தொடங்குவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்து கொண்டிருந்த பெண்களுக்கு இது மருத்துவ உதவிகள் இல்லாமலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருமடங்காக இருக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி மனமகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். சகோதரர்களுடன் சொத்துப் பிரச்சினையில் சமாதானம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். இது ஒரு பெரிய மனிதரின் உதவியால் நடக்கும்.

புதன் -
நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் வேண்டும். முடிந்தவரை பணம் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்று வைத்துக்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் கவனியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் வேண்டும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
சுயதொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். கமிஷன் மற்றும் தரகு தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்குவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
*****************************
சித்திரை -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இரண்டாவது குழந்தை உருவாகும் வாய்ப்பு உள்ளது. மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும்.

ஆரோக்கியத்திலிருந்த பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் இப்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார்கள். சகோதரர்களை உறவுகளிடம் ஏற்பட்ட வருத்தங்கள் அகன்று ஒற்றுமை ஏற்படும்.
சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேங்கி நின்ற பொருட்கள் அனைத்தும் முழுமையாக விற்றுத் தீரும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமணம் உறுதியாகும். திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு திடீர் வாய்ப்பாக ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்தத் தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனை தோன்றும். அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

செவ்வாய் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் சாதகமான நிலை இருக்கும்.

புதன் -
வியாபாரம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீடு மற்றும் தொழில் தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
முக்கியமான கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பண உதவிகளும் கிடைக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக ஏற்படும் சந்திப்புகளால் மன நிறைவைத் தரும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி வழிபாடு செய்யுங்கள். வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*****************************
சுவாதி -

நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்குத் தக்கவாறு வருமானம் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் வந்து விலகும்.

சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீடு தொடர்பான பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். அதேபோல, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன்-
தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். போக்குவரத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன்-
அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த சில பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வரும். சுப விசேஷங்கள் நடத்துவதற்கான தேதிகள் முடிவாகும். அலுவலகத்தில் தேவையான சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய நண்பர்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் மூலம் ஒரு சில ஆதாயம் ஏற்படும்.

சனி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். அவர்கள் மூலம் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவுக்கு வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் வந்து சேரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x