Published : 26 Jul 2020 06:50 AM
Last Updated : 26 Jul 2020 06:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமண பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்வீ்ர்கள். தாயாருடன் எதிர்பாராது கருத்துமோதல் வரும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

கடகம்: பிரச்சினைகளை தீர்க்க நல்ல வழி கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களின் அறிமுகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். புதிய நண்பர்களால் பிரச்சினைகள் பாதியாகக் குறையும்.

சிம்மம்: பணத் தட்டுப்பாடு குறைந்து தேவையான அளவு பணம் வரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள்.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கனிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். மனைவி ஆதரவாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள். மூத்த சகோதரர் வகையில் மனஸ்தாபம் ஏற்படலாம்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x