Published : 23 Jul 2020 11:05 am

Updated : 23 Jul 2020 11:08 am

 

Published : 23 Jul 2020 11:05 AM
Last Updated : 23 Jul 2020 11:08 AM

துலாம், விருச்சிகம், தனுசு: வார ராசிபலன்; ஜூலை 23 முதல் 29ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


உதவிகள் செய்வதன் மூலம் பட்டமும் பதவியும் பெறும் துலாம் ராசி அன்பர்களே.

இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகளில் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும்.

உத்தியோகஸ்தர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும்..

வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் நிலை உருவாகும். தெய்வ காரியங்களில் பங்கெடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. கலைத்துறையினர் சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள்.

மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கடமையை பெரிதெனப் போற்றும் விருச்சிக ராசி அன்பர்களே.

இந்த வாரம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தைத் தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த வருத்தமான செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர்.

பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும்.

கலைத்துறையினர், குறிப்பாக டெக்னிக்கல் துறையைச் சார்ந்தவர்கள் மேன்மை அடைவார்கள். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சில பிரச்சினைகள் தீரும் வகையிலான சூழல் உருவாகும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: அம்பாள் வழிபாடு செய்யுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு காலையில் சென்று 3 முறை வலம் வரவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

சாதனையாளராகத் திகழ்ந்து உரிய பலன் பெறும் தனுசு ராசி அன்பர்களே.

இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும்.

கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளால் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். உத்தியோகஸ்தர்கள் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவப் பாடங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலையை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

கலைத்துறையினர் பிறருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவன் கோயிலை வலம் வரவும். வீட்டில் சிவ வழிபாடு செய்யவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


துலாம்விருச்சிகம்தனுசு: வார ராசிபலன்; ஜூலை 23 முதல் 29ம் தேதி வரைதுலாம் விருச்சிகம்தனுசுவார ராசிபலன்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author