Published : 15 Jul 2020 06:29 am

Updated : 15 Jul 2020 06:29 am

 

Published : 15 Jul 2020 06:29 AM
Last Updated : 15 Jul 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

daily-horoscope

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சுவார்த்தை கைக்கூடும். கலைபு்பொருட்கள் சேரும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவரால் சில காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராது மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Daily horoscopeAstrologyஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இந்தநாள் உங்களுக்கு எப்படி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author