Published : 13 Jul 2020 04:39 PM
Last Updated : 13 Jul 2020 04:39 PM

திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த அநாவசியச் செலவுகள் இனி கட்டுக்குள் இருக்கும். வீண் செலவுகள் ஏற்படாது.

மருத்துவச் செலவுகளும் வெகுவாகக் குறையும். தந்தை வழி உறவினர்களிடமும், சகோதர வகையிலும் வருத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம் படிப்படியாக சீரான வளர்ச்சி ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சரி பார்த்துக்கொள்ளுங்கள். சக ஊழியர்களுடன் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

செவ்வாய் -
மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சுய தொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.


புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

வியாழன் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதேசமயம் வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். தொழில் அல்லது வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்திகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
மனசஞ்சலம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் கூடாது. நிதானத்தோடு செயல்பட்டால் எளிதாக இந்த நாளைக் கடக்கலாம்.

சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். மனநிம்மதி கூடும்.
************************

அவிட்டம் -

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்வியிலும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் ஏற்படும் கவலையால், தேவையான சேமிப்பு போன்ற விஷயங்களில் முற்படுவீர்கள். அலுவலகப் பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும்.


வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள் எதிர்பாராத வாய்ப்பாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பணத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு ஏற்படும்.

செவ்வாய் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் பண ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சனி -
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் தாமாக முன்வந்து உதவுவார்கள்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் அதனைத் தள்ளி வையுங்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***********************


சதயம் -

தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும் வாரம்.

பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் மிக எளிதாகவே அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வரவுக்கேற்ற செலவு இருக்கும். ஆனாலும் கணிசமான அளவில் சேமிப்பும் உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தருவதாக வந்துசேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். மனதில் தேவையில்லாத கற்பனைகள் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். வழக்கு தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாதம் செய்யாமல் இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். அதற்கு உண்டான ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்கும் எண்ணம் ஏற்படும். அவர்களின் கல்வி தொடர்பான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x