Published : 08 Jul 2020 06:30 AM
Last Updated : 08 Jul 2020 06:30 AM
மேஷம்: எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பணவரவு உண்டு.
ரிஷபம்: வீடு, மனை வாங்கும் கனவு நனவாகும் சூழல் கனிந்து வரும். வங்கிக் கடன் கிட்டும். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
மிதுனம்: பெற்றோரின் உடல் நிலை எதிர்பாராமல் பாதிக்கக்கூடும். கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். எதிலும் நிதானம் தேவை.
சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
கன்னி: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதும் இனிதே முடியும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள்.
துலாம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்திலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் உண்டாகும்.
தனுசு: வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீர்கள்.
மகரம்: ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
கும்பம்: திடீர் பயணங்கள், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். உதவுவதாக வாக்கு கொடுத்தவர்கள் தட்டிக் கழிப்பார்கள்.
மீனம்: உயர்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT