Published : 06 Jul 2020 03:12 PM
Last Updated : 06 Jul 2020 03:12 PM

மூலம், பூராடம், உத்திராடம்;  வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல் 12 வரை) 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரிய பேச்சு வார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். சொந்தவீடு தொடர்பான சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலமாக தீரும் வாய்ப்பு உள்ளது.
வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.
அதிலும் இந்த வாரம் புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். சிறு தூர பயணமாக இருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகளில் நிதானம் காக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

புதன் -
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார சிக்கல்கள் தீர்வதற்கான வழி வகை கிடைக்கும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். நண்பர்களால் வியாபாரம் தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர் பெருமக்களை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். உங்களுக்கு விருப்பமான சித்தரை மனதார நினைத்து வணங்குங்கள்.
**************************


பூராடம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம் இது.
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி நம்பிக்கை தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்களுக்கு கடந்த சில வாரங்களாக இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் தொடர்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
நிதானம் மிக அவசியம். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகத்தின் பணிச் சுமை கூடும். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் முக்கிய நபர்கள் உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். தூரத்து உறவினர் ஒருவரால் மன மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருக பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
******************************


உத்திராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த அநாவசியச் செலவுகள் இனி இருக்காது. குறிப்பாக மருத்துவச் செலவுகள் அதிகமாக இருந்த நிலை மாறும். மருத்துவச் செலவுகள் இருக்காது.
வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தரக்கூடிய அளவிற்கு வருமானம் பெருகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முற்றிலுமாக தீரும்.
உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும்.
திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
தொட்டது துலங்கும் நாள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொலைபேசி தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக அரசு சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
தொழில் தொடர்பான முக்கிய நபர்களை சந்திப்பதால் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் மூலமாக தேவையான முதலீடுகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்திற்காக அத்தியாவசியச் செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். அடுத்தவர் பிரச்சினைகளிலிருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சனி -
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தார் மீதான அக்கறை கூடும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உதவிகள் செய்து தர வேண்டியது இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். அலுவலகப் பணிகளை வீட்டில் வைத்து செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனநிறைவு ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி தாமதமாகலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அரசமர விநாயகர் வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x