Published : 06 Jul 2020 09:29 AM
Last Updated : 06 Jul 2020 09:29 AM

அஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல் 12 வரை)

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நீங்கள் இயல்புக்கு மாறாக ஒரு வித மந்த நிலையில் இருப்பீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும். இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக நினைத்து கவலைப்படுவீர்கள்.
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள் இதுவரை வராமலிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் கல்வியில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். எடுத்த காரியங்களை முழுமையான வெற்றியோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
.

செவ்வாய் -
எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். நீண்ட நாளாக ஒத்தி வைக்கப் பட்டிருந்த தொழில் முயற்சிகள் மீண்டும் செயலுக்கு வரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திரபாக்கியம் பற்றிய நல்ல செய்தி இன்று கிடைக்கும்.

வியாழன் -
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தையை ஒத்திப்போடவும். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்த்து விடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது, அதிலும் குறிப்பாக வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சனி -
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும். பழுதடைந்த பொருட்களை புதுப்பிக்கும் வேலையைச் செய்வீர்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*********************
பரணி -

எதையும் மன தைரியத்துடன் செய்து வெற்றியை காணக்கூடிய வாரம்.
மனக் குழப்பங்கள் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்துபோகும். பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தந்தைவழி உறவுகளிடம் இணக்கமாகச் செல்லுங்கள். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். சிறிய வியாபாரிகள் முதல் பெரிய அளவிலான வியாபாரிகள் வரை அனைவருக்கும் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

புதன் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று சமாதான முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சற்று அழுத்தம் அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் இயல்பாக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி தாமதமாகும்.


வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

சனி -
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். சகோதர வழி உறவுகள் தேடி வந்து உதவி செய்யும் நிலை ஏற்படும்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். முக்கியமான நபர்களை சந்திப்பதால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள். பிரத்தியங்கரா அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
*************************
கார்த்திகை -

சொல்லைச் செயலாக்கி காட்டக்கூடிய வாரம்.
தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். செலவுக்கு ஏற்ற வருமானம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். தாயாரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.
சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான விஷயங்களாகவே இருக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும்.கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

வியாழன் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்க பெறுவார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

சனி -
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துகள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாக படித்து பார்க்க வேண்டும்.

ஞாயிறு -
இதுவரை வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் வாசியுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x