Published : 06 Jul 2020 06:26 AM
Last Updated : 06 Jul 2020 06:26 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் நண்பர்கள் உங்களின் தூய நட்பைப் புரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்: சாதுர்யமாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். சொந்தபந்தங் களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத் தில் இருந்து பணம் வரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: மனதைக் குழப்பிய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து விடுங்கள். மறைமுகப் போட்டியை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x