Published : 30 Jun 2020 13:15 pm

Updated : 30 Jun 2020 13:15 pm

 

Published : 30 Jun 2020 01:15 PM
Last Updated : 30 Jun 2020 01:15 PM

மீன ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

meenam-july-palanagal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மீனம்:
இந்த மாதம் உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகலாம். எடுக்கும் காரியங்களில் தடைதாமதம் ஏற்பட்டு பின்பு சரியாகும். நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவராகத் திகழ்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவினர்களால் உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
தொழில் வியாபாரம், கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமும் கூட என்பதை மறந்துவிடாதீர்கள். மக்கள் நலனிற்கு எந்தக் குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும். கவலை வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை திறம்பட செய்துமுடிப்பீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும்.
பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் மாதமிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். செல்வாக்கு உயர பாடுபடுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம்.
மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்காலப் படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது.
உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மைதரும். மாணவர்கள் எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளைக் கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
ரேவதி:
இந்த மாதம் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது குடும்ப அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
பரிகாரம்:
முருகன் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்யுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மீன ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்ஜூலை மாத பலன்கள்மீனம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author