Published : 30 Jun 2020 12:46 pm

Updated : 30 Jun 2020 12:46 pm

 

Published : 30 Jun 2020 12:46 PM
Last Updated : 30 Jun 2020 12:46 PM

கும்ப ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

kumbum-july-palangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கும்பம்:
இந்த மாதம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு ஏற்படலாம்.
மனம் விரும்பியபடியான வீட்டிற்குக் குடி பெயர்வீர்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.
தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோரின் கருத்துகளை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனசஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் தருணம் இது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம்.
பெண்களுக்கு சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.
கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்துச் செல்வீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிரிகளும் நண்பராவார்கள்.
சதயம்:
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த சகஜ நிலையில் மாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும்.
பரிகாரம்:
முன்னோர்களை வழிபடுவது நல்லது. காகத்திற்கு அன்னமிடுவதும் சிறந்தது.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

கும்ப ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்கும்பம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்மாத பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author