Published : 30 Jun 2020 12:18 pm

Updated : 30 Jun 2020 12:18 pm

 

Published : 30 Jun 2020 12:18 PM
Last Updated : 30 Jun 2020 12:18 PM

மகர ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

magaram-july-palangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம்:
இந்த மாதம் மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ பயமோ இல்லாத நிலை ஏற்படும். நேர்மையாலும் ஒழுக்கத்தாலும் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் திறன் ஏற்படும்.
குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் அறிவுரை வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளியாக நிறைந்திருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழைத் தக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பிச் செல்வார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்.
தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். வெளிநாடு பயணம் தொடர்பான தகவல் இனிதே வந்துசேரும். எதிலும் தன்னிறைவு பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். அதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு குறிப்பாக வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. கடன்களிலிருந்து விடுபடவும் உகந்த மாதம் இது. வேலை மாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டு.
பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் ஒருசிலருக்கு உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம்.
கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.
அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் ஏங்கும். எச்சரிக்கை தேவை. அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. அதிகம் பேசுவதைத் தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள்.
திருவோணம்:
இந்த மாதம் பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல்நிலையை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள். முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும்.
அவிட்டம் 1,2 பாதம்:
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாகச் செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும்.
பரிகாரம்:
ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் நன்று.மனக் குழப்பத்தை நீக்கும். மனத்தெளிவை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 23, ,24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மகர ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்மகரம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்மாத பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author