

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விருச்சிகம்:
இந்த மாதம் வீண் பிரச்சினையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம்.
குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.
தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் முழுக்கவே வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் அமைதியாக பணியாற்றுவார்கள். வங்கி பணப் பரிமாற்ற முறைகள் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். வேலை நிமித்தமாக வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடலில் தோல் உபாதைகள் ஏற்பட்டு மறையும்.
பெண்களுக்கு, பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும்.
கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். இன்னும் வீரியத்துடன் செயலாற்றுங்கள்.
மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல பல குணாம்சங்கள் வந்து சேரும். கோர்ட் விஷயங்களில் சுமுகமான அணுகுமுறை இருக்கும். சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்கு உண்டான வாய்ப்புகள் ஏற்படும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் குறித்த கவலைகள் ஏற்படும். குடும்பச் செலவை சமாளிக்கும் வகையிலான பண வரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.
அனுஷம்:
இந்த மாதம் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவரின் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக அமையும். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.
கேட்டை:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வது நல்லது. மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம்.
பரிகாரம்:
ஸ்ரீதுர்காஷ்டகம் படித்து ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |