Published : 26 Jun 2020 10:56 AM
Last Updated : 26 Jun 2020 10:56 AM

கேட்காமலே உதவி செய்யும் நண்பர்கள், வாழ்க்கைத்துணையாக அமைந்தால் நரகம், செய்யும் காரியம் எப்போது வெற்றியாகும்?

27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 51;


-’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
அனுஷத்தின் சிறப்புகளைப் பார்த்து வருகிறோம். அனுஷ நட்சத்திரக்காரர்களின் குணங்களை, கேரக்டர்களைப் பார்த்து வருகிறோம்.
தொடர்ந்து பார்ப்போம்.

அனுசம் மகாலட்சுமியின் அம்சம் என்றும் வாயு பகவானின் அவதார நட்சத்திரம் என்றும் பார்த்தோம். மேலும் பல தகவல்களை பார்ப்போம்!

அனுஷம் எவற்றையெல்லாம் குறிக்கும்?
பனைமரம், பனையோலை, வெடி பொருட்கள், பட்டாசு, ரசாயனப் பொருட்கள், மருந்துகள், உரம், விவாசாய இடு பொருட்கள், எரு, மருத்துவமனை.
குளம், குட்டை., கழிப்பறை, சாக்கடை, குப்பைக் கூடை, சட்ட நடவடிக்கை, சட்ட சிக்கல், காவல்துறை நடவடிக்கை, வழக்குகள், விபத்துகள், கிணறு, தண்ணீர் தொட்டி, தீயணைப்புத் துறை.
வாகனங்களின் சக்கரம் (டயர்), மேலேயிருத்து கீழே விழுதல். மான்கள், மான் கொம்பு, மாங்கல்யம், நெற்றித் திலகம், தலை வகிடு, சடை பின்னல் என இவையனைத்தும் அனுஷத்தின் அம்சம்.
பெரும்பாலும் இவர்கள் மருத்துவம் சார்ந்த தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள், பெண்கள் மருத்துவம், செயற்கை முறையில் கருத்தரித்தல், போர்வெல் சர்வீஸ், கடல் கடந்து வியாபாரம், காவல் துறை, ராணுவப் பணி, வழக்கறிஞர், பயணம் தொடர்பான தொழில், சமையலறை உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, கட்டுமானப் பொருட்கள் விற்பனை, ஹார்டுவேர்ஸ், எதிர்பாராத அரசியல் பிரவேசம், விளம்பர நிறுவனம், ஆர்பாட்டமான சமுக சேவை, சுய விளம்பரம், உலை கலன் தொடர்பான வேலை, சுத்திகரிப்பு நிலையப் பணி, டயர் ரீ டிரேடிங், பஞ்சர் ஒட்டும் தொழில், மண் அள்ளும் இயந்திர தொழில் போன்ற தொழில் அல்லது வேலை அமையும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மாதவிடாய் பிரச்சினைகளை அதிகம் சந்திப்பார்கள். ஆண்கள் போதைப் பழக்க வழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து மீளவே முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். இவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை உணவுதான். உணவே விஷமாக மாறி வயிறு தொடர்பான பிரச்சினைகளைக் கொடுக்கும். ஹோட்டல் உணவை அறவே தவிர்க்க வேண்டும். வீட்டு உணவே சிறந்தது. அதேபோல குடிநீர் விஷயத்திலும், சுடு தண்ணீராக அருந்துவது மிகமிக நல்லது. அதேபோல பயணங்களில் அதிக எச்சரிக்கையோடு கவனமாக இருக்கவேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய ஆலயம் - குருவாயூர், காளஹஸ்தி.

இவர்கள் வணங்க. வேண்டிய தெய்வம் - மகாலட்சுமி மற்றும் லட்சுமி நாராயணர்.

விருட்சம் - மகிழ மரம்

மிருகம் - பெண் மான்

பறவை - வானம்பாடி

முத்துமாலை அணிந்து கொள்வது சிறப்பு.

ஆரோக்கியம் பற்றி முன்பே பார்த்து விட்டாலும் இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
நரம்புத் தளர்ச்சி, ஹீமோகுளோபின் பிரச்சினை, மன தடுமாற்றம், ஒவ்வாமை, நோயே இல்லாத நிலையில் நோய் இருப்பதாக நினைத்தல், இருட்டில் பயம், பயண பயம் போன்ற போபியா பிரச்சினைகளும் இருக்கும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையாக பொருத்தக்கூடிய நட்சத்திரங்கள் -
ஆயில்யம் - கேட்டை - ரேவதி ; இந்த நட்சத்திரங்களில் வாழ்க்கைத்துணை அமைந்தால் “இறைவன் கொடுத்த வரம்” என்றுதான் சொல்லவேண்டும். 99%

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ;
இந்த நட்சத்திரங்களில் துணை அமைந்தால் சிறப்பான நன்மைகளும், மனமொத்த தம்பதிகளுமாய் வாழ்வார்கள். 95 %

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திர துணை அமைந்தால் வசதி வாய்ப்புகளுக்கு குறையிருக்காது. சுகபோக வாழ்வு அமையும். 80%

திருவாதிரை- சுவாதி - சதயம் ;
ஊடலும் இருக்கும். சிறப்பான வாழ்வும் அமையும். சண்டைக்கு பின் ஏற்படும் சமாதானம்... எந்த இன்பத்திற்கும் ஈடாகாது என்பது தெரியும்தானே! 70%


கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் ;
மத்திம பலன் 50%


திருமணத்திற்கு தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்-

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி - பரணி - பூரம் - பூராடம் - இந்த நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது.


அஸ்வினி - மகம் - மூலம் - இந்த நட்சத்திர துணை அமைவது நித்தம்நித்தம் நிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும்.

மிருக சீரிடம் - சித்திரை - அவிட்டம் = இந்த நட்சத்திரக்காரரர்களை வாழ்க்கைத்துணையாக சேர்க்கக் கூடாது. நிம்மதி என்பதே இருக்காது. நெருப்பு வளையத்தில் இருப்பதுபோல் வாழ்க்கை இருக்கும்.

இந்த அட்டவணையில் இல்லாத நட்சத்திரங்களை ஜோதிடர் ஆலோசனை பெற்று அறிந்து கொள்ளுங்கள்.

அதிக நன்மைகளையும், வெற்றிகளையும் தரும் நட்சத்திரங்கள் -

ஆயில்யம் - கேட்டை - ரேவதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் நூறு சதவீத வெற்றியைத் தரும். பணம் தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புது முயற்சிகளில் ஈடுபடவும், தொழில் ஒப்பந்தங்கள் போடவும், வியாபார விஷயங்கள் லாபகரமாக முடியவும் ஏற்ற நாட்களாக இருக்கும். நண்பர்களாக அமைந்தால் உங்களின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருப்பார்கள்.


பரணி - பூரம் - பூராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் ஆதாயம் தருவதாகவும், சாதகமாகவும் இருக்கும். வீடு வாகனம் வாங்கவும், சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் அதிக லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடங்கவும் ஏற்ற நட்சத்திரங்கள். பத்திரப் பதிவு செய்ய, பதவி ஏற்க, பணியில் சேர என எதுவும் செய்யலாம். நண்பர்களாக அமைந்தால் பொருளாதார பிரச்சினைகளில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வார்கள்.


ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் சிறப்பான பலன்களைத் தரும். வேலைக்கு மனு செய்ய, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற, வேலையில் சேர, தொழில் தொடங்க, வியாபாரப் பேச்சுவார்த்தை தொடங்க, வங்கிக் கடன் பெற, கடன் அடைக்க, நோய் தீர, மருந்து உட்கொள்ள, தொழில் கட்டமைப்புகளை விரிவுபடுத்த ஏற்ற நாட்களாகும். நண்பர்களாக அமைந்தால் தேவையான உதவிகளை தேவையான சமயத்தில் சரியாக செய்து தருவார்கள்.


திருவாதிரை -சுவாதி - சதயம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் அதிக நன்மைகளையே தரும். தொழில் மற்றும் வியாபார பயணம் மேற்கொள்ளவும், ஒப்பந்தங்கள் போடவும், லாபம் தரும் காரியங்களைச் செய்ய ஏற்ற நாட்களாகும். நண்பர்களாக அமைந்தால் அதிகப்படியான உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றிகளைத் தரும். சுப விசேஷங்கள் செய்ய, பயணங்கள் மேற்கொள்ள, பணி மாறுதல் தொடர்பாக விண்ணப்பம் செய்ய, முக்கிய ஒப்பந்தங்கள் போட, வீடு மாற, பணியிடத்தில் மாற்றங்கள் செய்ய, வீட்டைப் புதுப்பிக்க என எதுவும் செய்யலாம். நண்பர்களாக அமைந்தால் சரியான நேரத்தில் சரியான உதவிகளை கேட்காமலேயே செய்வார்கள். லாபம் தரக்கூடிய விஷயங்களில் துணை இருப்பார்கள்.


தவிர்க்க வேண்டிய நாட்கள் மற்றும் நட்சத்திரக்கார நண்பர்கள்-

அஸ்வினி -மகம் - மூலம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் ரண வேதனையைத் தரும். ஏன் இதைச் செய்தோம் என்று நினைத்து நினைத்து அழும் அளவுக்கு துன்பத்தைக் கொடுக்கும். நண்பர்களாக அமைந்தால்... அவ்வளவுதான்... துன்பத்தின் உச்சத்தைக் காணும் அளவுக்கு துயரத்தைத் தரும்.


பரணி - பூரம் - பூராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியத்தாலும் பெரிய நன்மைகள் ஏதும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் உங்களைக் காட்டி மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். நண்பர்களாக அமைந்தால் அவர்களுக்கு சேவகம் செய்தே வாழ்க்கையை கழிக்க வேண்டியதாக அமையும்.


மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் தோல்வி அடைவது மட்டுமல்லாமல் உங்களுக்கு எதிராகவும் மாறி துயரத்தைத் தரும். நண்பர்களாக அமைந்தால் அவர்களால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக வேண்டியது வரும்.


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தயிர்சாதம் தானம் தருவது மிகப்பெரிய நன்மைகளைத் தரும். மேலும் தண்ணீர்ப் பந்தல் அமைப்பதும், பறவைகளுக்கு உணவு, நீர் தருவதும் சிறப்பான பலன்களைத் தரும்.

அனுஷம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான, தனித்தனி விஷயங்களை, குணங்களை, கேரக்டர்களை அடுத்துப் பார்ப்போம்.


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x