Published : 22 Jun 2020 12:20 pm

Updated : 22 Jun 2020 12:21 pm

 

Published : 22 Jun 2020 12:20 PM
Last Updated : 22 Jun 2020 12:21 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)

vaara-natchatira-palangal

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடப்பதால் மகிழ்ச்சி அடையக் கூடிய வாரம்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த அழுத்தங்கள் முற்றிலுமாக மாறும்.
தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு அயல்நாட்டில் இருந்து முதலீடுகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கலாம்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்கு தேவையான அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும் வாரம். சொத்து தொடர்பான பிரச்சினைகள் மிக எளிதாகத் தீரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.


இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும். சிறிய தவறு கூட உங்கள் மீது குற்றச்சாட்டாக திருப்பப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.

செவ்வாய் -
திடீர் பண வரவுகளால் மனம் மகிழும் நாள். கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் உற்சாகத்தை தருவதாக இருக்கும். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் தீரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

புதன் -
அடுத்தவர்கள் நலனுக்காக நீங்கள் இன்று கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலுவலகப் பணிகளில் இதேநிலைதான், சக ஊழியர்களின் வேலைகளை பார்க்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரி போக்கு இருக்கும். லாபத்தைக் குறைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது நல்ல பலனைத் தரும்.

வியாழன் -
வியக்கத்தக்க வகையில் எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியை சந்திக்கக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தேடி வரும். இதுவரை இருந்து வந்த அரசு தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

வெள்ளி -
அமைதியாக இருப்பது ஆனந்தத்தை தரும். நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் தவறுகளைக் கண்டுபிடித்து உங்களுக்கு எதிராக மடை மாற்றுவார்கள். அலுவலகத்திலும் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தைக் கையாளும் போது அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.

சனி -
தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மந்தநிலை மாறி அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

ஞாயிறு -
அயல்நாட்டிலிருந்து நெருங்கிய நண்பர்கள் மூலமாக மிகப்பெரிய உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலன்களை மேலும் அதிகமாக்கித் தரும்.
**********************


சித்திரை -
நிதானமாக சிந்தித்து செயல்பாடுகளை வைத்துக்கொண்டால் வெற்றிகளைப் பெறலாம்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளால் மனநிம்மதி இல்லாமல் இருந்திருப்பீர்கள். இனி பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும்.
தந்தை வழி சொத்துகள் தொடர்பாக பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். அலுவலகப் பணிகளில் நிம்மதியற்ற நிலை இருந்து வந்திருக்கும். இனி பணி தொடர்பான பிரச்சினைகள், அழுத்தங்கள் நீங்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். அரசு வழி தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும்.
இளைய சகோதரரிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் தீரும். மூத்த சகோதரர் உங்களுக்கு பெரும் உதவியைச் செய்வார். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பலவித நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து மனநிறைவு கொள்ளும் நாள். அலுவலகப் பணிகளில் சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள்.

புதன் -
அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் உடனே எடுக்க வேண்டாம். அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும், கடன் கொடுப்பது கூடாது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிக்காட்ட வேண்டாம்.

வியாழன் -
வீடு வாகனம் போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். சொத்து தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடிவுக்கு வரும். சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க கூடிய நாள்.

வெள்ளி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது போல் உணர்வீர்கள். இறைவழிபாடு மன அமைதியைத் தரும்.

சனி -
பணவரவு சரளமாக இருக்கக்கூடிய நாள். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்த கடன் தொகை இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி நன்றாகவே இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சனிபகவான் வழிபாடு செய்யுங்கள். சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************


சுவாதி -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக் கூடிய வாரமாக இருக்கும்.
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் உற்சாகத்தைத் தரும். அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும்.
வழக்கு தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் இருந்த கவலை நீங்கும்படியாக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். சொத்துப் பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சுயசிந்தனை அதிகரிக்கும் நாள். இன்னும் சொல்லப்போனால் சுய பச்சாதாபம் அதிகரிக்கும். எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்ப நலனுக்காக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட குடும்பத்தாருடன் ஆலோசனை செய்வீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

செவ்வாய் -
மன நிறைவைத் தரக் கூடிய நாள். குழப்பங்கள் தீரும். பணவரவு தாராளமாக இருக்கும். இன்று எடுத்து செய்யும் அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். வியாபார பயணங்களில் ஆதாயம் கிடைக்கும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பண வரவு ஏற்படும்.

வெள்ளி -
உறவினர்கள் நண்பர்கள் என பலருக்கும் உதவிகள் செய்ய வேண்டியது இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சனி -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வியாபாரம் தொடர்பான செய்தி கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல்நலம் திருப்திகரமான முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வீட்டு பராமரிப்புச் செலவுகள் செய்வது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!


அஸ்தம் சித்திரை சுவாதி ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author