Published : 19 Jun 2020 06:47 AM
Last Updated : 19 Jun 2020 06:47 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தோற்றப் பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அடிக்கடி தொல்லை தரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும்.

கன்னி: குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். திருமணம் காரியங்கள் கூடி வரும். சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த உறவினர்கள் மீண்டும் வருவார்கள். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். திடீர் பயணம் உண்டு.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்டநாள் கனவு நனவாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x