Published : 25 May 2020 18:06 pm

Updated : 25 May 2020 18:07 pm

 

Published : 25 May 2020 06:06 PM
Last Updated : 25 May 2020 06:07 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; ஜூன் மாத பலன்கள்

june-palangal


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம்:
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதம்)


இந்த மாதம் நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.


நன்றாக ஓய்வு எடுப்பீர்கள். கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் சூழ்நிலை ஓரளவு மனநிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும்.


குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும்.


தொழில் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும் ஆதாயமும் கிடைக்கப் பெறுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அகலும். நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.


உத்தியோகஸ்தர்கள் வேலைக்குச் சென்று வரும் அன்பர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய நற்பெயர் கிடைக்கும்.

பெண்களுக்கு இந்த மாதம் சுமாராகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவீர்கள்.


மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்யலாம்.


அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.


சித்திரை 3, 4-ம் பாதம்:
இந்த மாதம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள்.


சுவாதி:
இந்த மாதம் உடனிருப்போரால் பிரச்சினை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.


விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்தமாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13,
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் எவருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள். சுக்கிர யோகம் கிட்டும். தரித்திரம் விலகும்.
*************************************


விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த மாதம் இதுவரை நஷ்டமாக இருந்துவந்த அனைத்தும் லாபமாக மாறும்.


பண விஷயம் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும்படியான சூழலே காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும். அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.


குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எந்தத் தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம்.


வீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் - உறவினர் வருகை மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடையும்.


தொழில் ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு அனுகூலமான செய்திகள் வரக் கூடும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும்போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முக்கிய முடிவுகளை பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து செய்யுங்கள்.


உத்தியோகஸ்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர் ஒருவரின் தேவையற்ற தலையீடு தங்களுக்கு மன வருத்தத்தைத் தரும். கடுமையாக பாடுபட்டு உழைத்தாலும் நற்பெயர் உங்களுக்கு கிடைப்பது சந்தேகமே!


பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும். அதனைத் தவிர்க்க முயன்ற முயற்சிகளை எடுங்கள். முக்கிய விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை கவனமுடன் செயல்படுவது நல்லது.


மாணவர்கள் தொழில் சம்பந்தமான கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செய்முறைப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.


அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகள் முழுமையாக வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும்.


கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக கலைஞர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்வீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும். ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.


அனுஷம்:
இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உருவாகும்.


கேட்டை:
இந்த மாதம் வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம், புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் முதலானவற்றை இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிட்டும்.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி
பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு அரளி மாலை சாற்றுங்கள். எதிரிகள் தொல்லை ஒழியும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.
******************************************************************************************************************


தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும்.


வரவேண்டிய பணம் வந்து சேரும். அல்லது அதற்கான காரியங்கள் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவு பெறும். இதனால குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.


குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.


குடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவன் - மனைவி இடையே கலந்து ஆலோசித்து எந்தக் காரியத்தையும் செய்வது நல்லது.


தொழில் - வியாபாரிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். நிறுத்தி வைத்திருந்த சில முயற்சிகளை இப்போது மேற்கொள்வது நல்லது. வெளியூரிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும்.


உத்தியோகஸ்தர்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றினாலும் அவை தானாகவே தெளிவு பெறும். கவலை வேண்டாம்.


பெண்களுக்கு சில உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் செயல்பட்டு அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். சிறு தொந்தரவாக இருந்தாலும் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.


மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிகாரம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.


கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்களைத் தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற காலமிது. சமூக வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழ் விருது கிடைக்கும்.


மூலம்:
இந்த மாதம் குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்துப் போவதால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.


பூராடம்:
இந்த மாதம் நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும்.


உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25,
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
பரிகாரம்: நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து நல்லெண்ணெய் விளக்கேற்றவும். துஷ்ட சக்திகள் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும்.
**********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

துலாம்விருச்சிகம்தனுசு ; ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author