Published : 25 May 2020 17:28 pm

Updated : 25 May 2020 17:39 pm

 

Published : 25 May 2020 05:28 PM
Last Updated : 25 May 2020 05:39 PM

கடகம், சிம்மம், கன்னி ; ஜூன் மாத பலன்கள்

june-palangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம்:


(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


இந்த மாதம் துணிவுடன் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்க நினைப்பீர்கள்.


உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்திலும் முடிக்க முடியும் என்ற மன தைரியத்துடன் செயலாற்றுவீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ அனுகூலம் உங்களை அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து வழி நடத்தும்.


குடும்பத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் நேரம் செலவழிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீங்களே முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உடல்நலம் சரியில்லாதவர்களின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் - சகோதரி யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் இப்போது ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. உற்றார் - உறவினரின் வருகையால் இல்லம் சந்தோஷத்தில் மூழ்கும்.


தொழில் அமோகமாக நடக்கும். நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காததால் சில சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.


உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் நன்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும்.


பெண்கள் பேச்சில் நிதானம் தேவை. குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வரும் போது பொறுமையைக் கையாளுங்கள்.


மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விரும்புவோர் இப்போது அதற்கான நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.


அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.


கலைத்துறையினர் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

புனர்பூசம் 4 :
இந்த மாதம் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.


பூசம்:
இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.


ஆயில்யம்:
இந்த மாதம் வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13,
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை மலர் அணிவித்து வேண்டிக்கொள்ளுங்கள். எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும்.
******************************************************************************************************************


சிம்மம்:

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும்.


உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.


குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


வண்டி , வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.


புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த லாபமும் விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும்.


உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.


பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விஷயங்கள் கை கூடி வரும்.


அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும்.


கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

மகம்:
இந்த மாதம் கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும்.


பூரம்:
இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோக ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.


உத்திரம் 1 :
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்து பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில் மனநிம்மதி உண்டாகலாம்

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - சனி
பரிகாரம்: சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும். மனதின் குழப்பங்கள் தெளியும். நிம்மதியும் தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
*******************************************************************************


கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2-ம், பாதம்)


இந்த மாதம் உங்கள் மனம் தெளிவாகும்.


நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். முகத்தில் மலர்ச்சியைக் காண முடியும். உங்களின் இஷ்ட தெய்வங்களின் ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். பிடித்தவர்களைச் சந்தித்து மனதில் இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்வீர்கள்.


குடும்பத்தை பொறுத்தவரை அவ்வப் போது பிரச்சினைகள் தலை தூக்கும். பங்காளிகள் பிரச்சினைகளுக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடன் நீங்கள் கோபமின்றிப் பேசுங்கள். அவர்களே ஆச்சரியமாக ஒதுங்கி விடுவார்கள். கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர நேரலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ளுவீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபடலாம்.


தொழிலில் புதிய விஸ்தரிப்புத் திட்டத்தில் ஈடுபடாமல் இருப்பது தற்சமயம் நல்லது. நிதி நிறுவனங்களிடமிருந்து பண உதவிகள் கிடைப்பதில் தடங்கலும் தாமதமும் ஏற்படும். தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது தொழிலை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் குடும்ப விஷயங்களை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மட்டுமே வேலையில் நல்லதாக திறம்படச் செய்ய முடியும். யாரையும் நம்பி எந்த வேலையிலும் இறங்க வேண்டாம்.


பெண்கள் பொறுமையைக் கடைப்பிடித்து வருவது மிக முக்கியம் . வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.


மாணவர்கள் ஞாபக சக்தியும் கிரகிப்புத் திறனும் குறைந்து காணப்படும். அதனால் படிப்பில் கவனம் செல்லாது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.


அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும்.


கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும்.


உத்திரம்:
இந்த மாதம் தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் இருக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.


ஹஸ்தம்:
இந்த மாதம் முன்யோசனையுடன் திட்டமிடுவது அவசியம். தந்தை வழி தொழில் செய்வோருக்கு அதிக லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் இது.


சித்திரை:
இந்த மாதம் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவை நடக்க ஆரம்பிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.
************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

கடகம்சிம்மம்கன்னி ; ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author